அரசியல்தமிழ்நாடு

நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சென்னையில் கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கே நேரில் சென்று குறைந்த விலையில் உணவு வழங்க நடமாடும் 3 அம்மா உணவகங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், பென்ஜமீன், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 வாகனங்கள் மூலம், அம்மா உணவகங்களில் தயாரிக்கப்பட்ட தரமான உணவுகள் கட்டிட தொழிலாளர்களுக்கு நேரில் வழங்கப்பட இருக்கிறது.