அரசியல்தமிழ்நாடு

நவ 16-ஆம் தேதி பள்ளிகள் திறப்பை கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கொரோனா அச்சம் காரணமாக வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறப்பை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சம் முழுமையாக விலகாத சூழலில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு சரியானதாக தோன்றவில்லை என தெரிவித்துள்ளார்.பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பத் தயங்கும் நிலையில், தனியார் பள்ளிகள் அளிக்கும் அழுத்தத்ததால் அரசு இந்த முடிவை எடுத்ததாக இருக்கக் கூடாது என கூறியுள்ளார்.

ஆந்திராவில் வகுப்புகள் தொடங்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அச்சத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும் என்றும், அதுவரை ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வல்லுனர்கள் குழு பரிந்துரைக்கும், கள எதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.