இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

8 மாத கால இடைவெளிக்குப் பின்னர் ஆளுநர் இன்று டெல்லி சென்றார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய ஆளுநர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுற்கு அளிக்கப்பட்ட ஒப்புதல், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவித்தல் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.