அரசியல்உலகம்

அமைதி காக்க வேண்டுமென ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டுமென்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில் ஆதரவாளர்கள் இடையே பேசிய அவர், கடைசி வாக்கு எண்ணி முடிக்கும் வரை தேர்தல் முடியாது என்றார். தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வெற்றியை நோக்கிய சரியான திசையில் தாம் சென்று கொண்டிருப்பதாக கூறிய ஜோ பைடன், தற்போது அமைதி காப்பது போல தொடர்ந்து அமைதி காக்க வேண்டுமென்றும் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.