பிக்பாஸ் தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சனம் தரப்பில் மனு
பிக்பாஸ் தர்ஷன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தன்னை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக சனம் அளித்த புகாரின்பேரில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தர்சன் மீது ஏற்கெனவே அடையாறு காவல்நிலையத்தில் மோசடி, ஆபாசமாக பேசுதல், மிரட்டல், பெண்னை மானபங்கபடுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சனம் தரப்பில் தற்போது உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சனம் மீது தாக்குதல் நடத்தியதற்கு தர்சன் மீது கொலை முயற்சி வழக்குப்பதியவும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்கு 66 (ஏ) என்ற சட்டப்பிரிவின் கீழும் குற்றச்சாட்டை சேர்க்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.