இந்தியா

டெல்லியில் கொரோனா 3ம் கட்ட அலை வீசத் தொடங்கியுள்ளது – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா 3ம் கட்ட அலை வீச தொடங்கியிருப்பதாக அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரே நாளில் 6,725 பேருக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், கடந்த சில நாள்களாக கொரோனா அதிக எண்ணிக்கையில் உறுதியாகி வருவதாகவும், 3ம் கட்ட அலை வீசத் தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது என்றும், எனினும் கொரோனா நிலவரம் குறித்து டெல்லி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினும், 3ம் கட்ட கொரோனா அலை வீசத் தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் ஐசியு வார்டுகளில் 80 சதவீத படுக்கைகளை ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை அரசு நாட இருப்பதாகவும் சத்யேந்திர ஜெயின் கூறினார்.