க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு!…
க/பெ ரணசிங்கம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானிஸ்ரீ ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் க/பெ ரணசிங்கம். கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தாலும், ஜீ ப்ளஸ் என்ற ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இயக்குநர் பாரதி ராஜா, நடிகர் சூர்யா உட்பட திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதிகளவில் மக்களின் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, தயாரிப்பாளரான KJR ஸ்டுடியோஸ் இன் KJ ராஜேஷ் இயக்குநர் விருமாண்டிக்கு maruti XL car ஒன்றை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.