கடவுள் நம்பிக்கையில் அதிமுகவும், பாஜகவும் ஒன்றுதான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கடவுள் நம்பிக்கையில் அதிமுகவும் பாஜகவும் ஒன்று தான் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆவீன் சார்பாக தீபாவளிக்காக 5 வகையான இனிப்புகள் 100 கிராம் வீதம் 500 கிராமுக்கு 375 ரூபாய்க்கு விற்கபடுகிறது.
இதன் விற்பனையை சென்னை நந்தனத்தில் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு 80 ஆயிரம் கிலோ ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்தாண்டு 1 லட்சம் கிலோ இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரை தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பியிருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.