இந்தியா

வடகிழக்கு பருவமழை தீவிரம் : அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!…

வடகிழக்கு பருவமழை வலுவடைவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவ மழை வலுவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கும், கேரளாவில் வரும் 6-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.