தமிழ்நாடு

சேலம் அரசு மருத்துவமனையில் பிரமாண்ட ஆக்சிஜன் கொள்கலனை திறந்துவைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன ஆக்சிஜன் கொள்கலனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொள்கலனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்துவைத்தார். அதன் பின்னர் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 551 ஆசிரியர்களுக்கு நியமண ஆணைகளை வழங்கினார்.