உலகம்

துருக்கி நிலநடுக்கம்: 90 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 4வயது சிறுமி

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 4வயது சிறுமி 90 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் அந்த சிறுமி .

இதனை தொடர்ந்து அந்த சிறுமி உடனடியாக மருத்துவ்வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இஸ்மீர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஆய்தா என்ற 4வயது சிறுமியின் முனகல் குரல் கேட்டு மீட்பு படையினர் விரைந்து சென்று அவளை மீட்டனர். ஆனால் அந்த சிறுமியின் தாய் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து விட்டார்.