Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 2,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி…

தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் :

தமிழகத்தில் இன்று மட்டும் 80,192 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 2,348 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 621 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மறுபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,413 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 6,544-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 19,061 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 28 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 14 போ் அரசு மருத்துவமனைகளிலும், 14 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,272-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.