அரசியல்உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் புதிய சாதனை!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். பிடன் வெற்றிபெற இன்னும் 6 தேர்வாளர்கள் வாக்குகளே தேவை.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள அதிபர் வேட்பாளர் என்ற சாதனையை ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.

தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 69,629,972 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ட்ரம்ப் இதுவரை 67,567,559 வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளை விடவும், 2012-ல் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும்.