வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்…

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நேற்றைத் தொடர்ந்து இன்றும் உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 183.86 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று 657.91 புள்ளிகள் உயர்ந்து 41,233.97 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.53 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று 49.50 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய நிலையில், இன்று 178.75 புள்ளிகள் உயர்ந்து 12,091.20 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.52 சதவிகிதம் உயர்வாகும்.

அதிகபட்சமாக டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகத்தின் தொடக்கம் முதலே ஏற்றம் கண்டுள்ளன.

நேற்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் ஏற்றம் கண்ட நிலையில் இன்று 2.34 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.