அரசியல்தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தித் தமிழக ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருப்பது சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.