விளையாட்டு

டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 1000 வெற்றிகளைப் பெற்று ரபேல் நடால் சாதனை

டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 1000 வெற்றிகளைப் பெற்ற 4வது வீரர் என்ற சாதனையை ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் படைத்துள்ளார்.

20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ரபேல் நடால், பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாடி வருகிறார். இந்த தொடரின் 2வது சுற்றில் சக நாட்டு வீரர் லோபேஷ்-ஐ 4க்கு 6, 7க்கு 6, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்திய அவர் இந்த வெற்றியின் மூலம், ஏடிபி முதல் நிலை டென்னிஸ் போட்டிகளில் தனது 1000வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

1,274 வெற்றிகளுடன் ஜிம்மி கானர்ஸ் முதலிடத்தில் உள்ள நிலையில், 1,242 வெற்றிகளுடன் ரோஜர் பெடரர் 2வது இடத்தில் உள்ளார்.