அரசியல்தமிழ்நாடு

தோல் பதனிடுதல் துறையில் ரூ.20 கோடி செலவில் பல்நோக்குதிறன் மேம்பாட்டு மையம் அமைத்திட, முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்

தோல் பதனிடுதல் துறையில் பல்நோக்குதிறன் மேம்பாட்டு மையம் வாணியம்பாடியில் 20 கோடி ரூபாய் செலவில் அமைத்திட, மத்திய காலணி பயிற்சி நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுகழகத்திற்கும் இடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை, கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், ஒரகடத்தில் இன்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள, சரக்கு நகர்வு மேலாண்மை மற்றும் போக்குவரத்து பிரிவிற்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டுமையம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்துவைத்தார்.

மதுரையில் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், சென்னை நொளம்பூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்.