வணிகம்

(06-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4839 உயர்ந்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ₹4810 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 29 உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹38,480-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 232 உயர்ந்து ₹38,712-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 67.50 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 1.50 உயர்ந்து ₹ 69.00 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 232 உயந்தது.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 152 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் 38,000 கடந்து இன்று சவரன் ₹38,712-க்கு விற்பனையாகிறது.