இந்தியா

பண்டிகை காலங்கள் வருவதை ஒட்டி விமானங்களில் 75 சதவீத பயணிகள் பயணிக்க மத்திய அரசு அனுமதி

பண்டிகை காலங்கள் வருவதை ஒட்டி, விமானங்களில் 75 சதவீத பயணிகளை அனுமதித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டு, 60% பயணிகள் மட்டுமே பயணிக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் விமானங்களில் 70 முதல் 75 சதவீதம் அளவிற்கு பயணிகள் பயணிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2021 பிப்ரவரி 24-ந் தேதி வரை மட்டுமே இந்த உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.