தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென சென்னை வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 14 மாவட்டங்களில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது