இன்றைய பங்குச்சந்தை நிலவரம்…
பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 41,487 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.46 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 12,164 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.42 சதவிகிதம் உயர்வாகும்.
பங்குச்சந்தையில் ரிலையன்ஸ், எம்&எம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடக்கம் முதலே ஏற்றம் கண்டுள்ளன. இதனைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி., பஜாஜ் ஆட்டோ, டி.சி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றமடைந்துள்ளன.
எனினும் மாருதி சுசூகி, நெஸ்ட்லே, ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.