அரசியல்தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயாராக உள்ளது – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகமும் தயாராக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூடுதலாக 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆட்சியர் கட்டடத்தை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலைகளில் தேங்கும் மழைநீரை நீர் நிலைகளில் சேமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உயிர் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.