தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
சென்னை -தேனாம்பேட்டையில் சுகாதார அலுவலர்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ தொற்று பரவல் பெரிதும் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிகளிடம் விளக்கி உள்ளதாக கூறிய அவர், இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்றார். முகக் கவசம் அணியாத 10 லட்சம் பேருக்கு இதுவரை அபராதம் விதித்துள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.