விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : காலிறுதிக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் நட்சத்திர ஆட்டக்காரரான ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று முன்தினம் சக நாட்டு ஆட்டக்காரரான பாப்லோ கெரேனோ பஸ்டாவை தோற்கடித்து சர்வதேச போட்டிகளில் ஆயிரமாவது வெற்றியை நடால் பதிவு செய்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால் மோதினார். இதில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நடால் முன்னேறினார்.