இந்தியா

பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் மாதிரியைத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், ராக்கெட் மாதிரியைத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், நாளை பிற்பகல் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த ராக்கெட் இ.ஓ.எஸ். 01 என்ற புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோளையும், வணிக முறையிலான 9 செயற்கைக்கோள்களையும் விண்ணுக்குக் கொண்டு செல்கிறது.

இந்நிலையில் இஸ்ரோ அதிகாரிகள் ராக்கெட் மாதிரியை எடுத்துவந்து ஏழுமலையான் கோவிலில் சுவாமி பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.