இந்தியா

போலந்து நாட்டில் உள்ள தேசிய மைதானம் கொரோனா தற்காலிக மருத்துவ மையமாக மாற்றம்

போலந்து நாட்டில் உள்ள தேசிய மைதானம் கொரோனா தற்காலிக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1200 படுக்கை வசதிகளும், நிறைய வென்டிலேட்டர்களும் இங்கு உள்ளன.

இதுபோல் நாட்டில் உள்ள பிற நகரங்களிலும் கொரோனா மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக போலந்து பிரதமர் Mateusz Morawiecki தெரிவித்தார்.

அங்கு கடந்த 4ந்தேதி முதல் ஷாப்பிங் மால், தியேட்டர்கள், மியூசியம், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.