இந்தியா

பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.!

பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோவின் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-01 (EOS-01) மற்றும் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் நாளை மதியம் 3 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து அந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.

கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவையால் இந்த ஆண்டு இதுவரை ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் எதையும் இஸ்ரோ செலுத்தவில்லை. நாளை பிஎஸ்எல்வி-சி 49 ராக்கெட் மூலம் செலுத்தவுள்ள செயற்கைக்கோளே, இந்த ஆண்டில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் ஆகும்.

அதிலுள்ள சின்தடிக் அபர்சர் ரேடார் (synthetic aperture radar) மூலம் அனைத்து தட்ப வெப்பநிலைகளிலும் படங்களை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.