இந்தியா

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டல் நெறிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டல் நெறிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோர் ஏழு நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் விதிமுறை உள்ளது.

நேற்று அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டல் நெறிகளில் 72 மணி நேரத்துக்குட்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றுடன் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நெகடிவ் சான்று இல்லாத பயணிகள் தனிமைப்படுத்துதலைத் தவிர்க்க விமான நிலையத்திலேயே கிடைக்கும் பரிசோதனை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.