அரசியல்தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் 321 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளை இன்று தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்…

நீலகிரி மாவட்டத்தில் இன்று 321 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

கொரோனா பரவல் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி மாவட்டத்துக்கு செல்கிறார்.

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.