தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் ;பல்கலைக்கழக மானியக்குழு வெளியீடு..
தமிழகத்தில் 16ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், வகுப்பறைகளுக்கு வர வேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் மாணவர்கள், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் கல்வி கற்பதை தேர்வு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும், வகுப்பறைகள் மற்றும் கற்றல் தளங்களில் இருக்கும் இடத்தை பொறுத்து, பாதுகாப்பான பகுதிகளில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்றும், நுழைவுவாயில், வெளியேறும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர், கிருமிநாசினி, முகக்கவசம் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.