டிசம்பர் இறுதிக்குள் 7,600 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் – அமைச்சர் செங்கோட்டையன்
டிசம்பர் மாத இறுதிக்குள் 7600 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே சங்கர்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 339 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டு அங்கீகார நீட்டிப்பை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 3942 பேர் பங்கேற்றதாகவும், ஆனால் இந்த ஆண்டு 15,497 பேர் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.