டெல்லியில் பனிமூட்டம் அதிகரிப்பு : வாகன ஓட்டிகள் கடும் அவதி
டெல்லியில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் காலை வரை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
நாட்டின் தலைநகரான தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் கடும் பனி மூட்டம் ஏற்படும் நிலையில், தற்போதே டெல்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.
சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பனிமூட்டத்தில் கட்டடங்கள் தெரியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.