அரசியல்தமிழ்நாடு

பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை பற்றிப் பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்றார்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு தார்மிக உரிமை இல்லை எனவும், அதிமுக ஆட்சியில் தான் பேரறிவாளனுக்கு இரண்டுமுறை பரோல் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.