நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் வாழ்த்து
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
கமல்ஹாசன் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்துக்கு வந்த அவருக்கு பட்டாசுகள் வெடித்து மேளத் தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. வாழ்த்து கூற வந்தவர்களுக்கு மரக்கன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.