இந்தியா

புல்வாமாவில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு – 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சண்டையின் இடையே பொதுமக்கள் 2 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தான்.

பின்னர் அப்பகுதியை சோதனையிட்ட வீரர்கள் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றினர்