மேலும் 3 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயார் – இஸ்ரோ தலைவர் சிவன்
தகவல் தொடர்பு செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்களை அடுத்து ஏவ உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பி.எஸ்.எல்.வி-சி50 ராக்கெட் மூலம் சி.எம்.எஸ்.-01 என்ற தொலைதொடர்புக்கான செயற்கைக்கோள் ஏவப்படும் என்றார்.
புதிய ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி மூலம் இ.ஓ.எஸ்-02 என்ற புவி ஆய்வு செயற்கைக்கோளும், ஜிஎஸ்எல்வி-எஃப்10 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்.-03 என்ற மற்றொரு புவி ஆய்வுக்கான செயற்கைக்கோளும் வரும் காலத்தில் விண்ணில் செலுத்தப்படும் என சிவன் கூறினார்.