இந்தியா

குஜராத்தின் ஹசிரா-கோகா இடையான படகுப் போக்குவரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

குஜராத்தின் ஹசிரா – கோகா இடையே படகுப் போக்குவரத்தைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஹசிரா – கோகா இடையே சாலை வழியாக 370 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல 12 மணிநேரமும், ரயிலில் 527 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல 9 மணி நேரமும் ஆகிறது. படகுப் போக்குவரத்து தொடங்குவதால் கடல்வழியே 90 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 4 மணி நேரமே ஆகும்.

இரு நகரங்கள் இடையே இயக்கப்படும் வாயேஜ் சிம்பனி படகில் ஒவ்வொன்றும் 50 டன் எடை கொண்ட 30 லாரிகள், 100 கார்கள் ஆகியவற்றுடன் 500 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் குறைவதுடன், காற்று மாசுபடுவதும், சாலை விபத்துக்களும் குறையும்.