தமிழ்நாடு

தேசிய அளவில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் தமிழகத்திற்கு முதலிடம்

தேசிய அளவில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில், முதல் மாநிலமாக தேர்வு பெற்று தமிழகம் தேசிய நீர் விருதை பெறுகிறது.

நீர்வளங்களை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதில் சிறப்பாக பணியாற்றும் மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை தேர்வு செய்து, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில், தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மாவட்டங்கள் பிரிவில் வேலூர், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களும், சிறந்த உள்ளாட்சி பிரிவின் கீழ் மதுரை மாநகராட்சியும் விருது பெறுகின்றன. இந்த விருதுகள் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் டெல்லியில் வழங்கப்படுகின்றன.