அரசியல்தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது குறித்து 11 ஆம் தேதி முக்கிய முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, வருகிற 11 -ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மதுரை – விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 9 ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

இந்த கூட்டம் நடைபெற்ற பின்னர் 11 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைப்பது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.