தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், அதிமுக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வீரமாமுனிவரின் 340வது பிறந்தநாளையொட்டிச் சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வீரமாமுனிவர் தேம்பாவணி என்கிற பக்தி இலக்கியத்தை எழுதியதுடன், சதுரகராதி என்கிற அகர முதலியைத் தொகுத்துள்ளதையும் குறிப்பிட்டார்.