அரசியல்தமிழ்நாடு

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

கருத்து கேட்பு கூட்டத்திற்கு பிறகு, ஒருவேளை பள்ளிகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் ஒட்டர்கரட்டுப்பாளையத்தில் 583 பால் உற்பத்தியாளர் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகைகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றார்.

பெற்றோர், மாணவர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.