இந்தியா

வாரணாசியில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது சொந்த தொகுதியான வாரணாசியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

காணொலி மூலம் பங்கேற்கும் இந்த விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். மேலும் தனது தொகுதியில் 614 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்த திட்டங்களையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியின் போது இத்திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் உரையாடுகிறார். சாரநாத் ஒலி-ஒளி காட்சி, ராம் நகரில் உள்ள மேம்படுத்தப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை, கழிவுநீர் மேலாண்மை தொடர்பான பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.