(09-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 304 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கிராமிற்கு நேற்று 4,884 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 38 ரூபாய் உயர்ந்து 4,922 ரூபாயாக விற்பனையாகிறது.
இதேபோல் 39 ஆயிரத்து 72 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 304 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 376 ரூபாயாக விற்பனையாகிறது.
நேற்று 70 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று ஆயிரம் ரூபாய் அதிகரித்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.