Covid19இந்தியா

இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி….

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,53,657-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 48,405 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 79,17,373-ஆக அதிகரித்தது.

கரோனா தொற்றுக்கு மேலும் 490 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,26,611-ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 45,240 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 11-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,09,673 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11,85,72,192 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், நேற்று மட்டும் 8,35,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.