அரசியல்உலகம்

புதிய அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை வழிநடத்துவதற்கும், ஒன்றிணைப்பதற்குமான வாய்ப்பை பைடன் வென்றுள்ளதாக ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். மேலும், துணை அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள, கமலா ஹாரீசின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது என பாராட்டிய அவர், தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கையை கேட்கும் அனைத்து உரிமைகளும், ட்ரம்புக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.