வணிகம்

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதாரச் செயல்பாடுகள் முழு வேகத்தை அடைந்துள்ளதால் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் எழுச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயர்ந்து 42 ஆயிரத்து 552 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 184 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 448 ஆக இருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை 3 விழுக்காடு வரை உயர்ந்தது.