ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் மாற்றம், தமிழகத்தை சேர்ந்த ‘யார்க்கர்’ நடராஜன் அணியில் சேர்ப்பு
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு விராட் கோலி இந்தியா திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
உடற் தகுதி காரணமாக ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும், டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் இடம் பெறுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருபது ஓவர் அணியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் நடராஜன் சேர்க்கப்படுவதாகவும், விக்கெட் கீப்பர் சஞ்சு சேம்சன் ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.