நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது..
பள்ளிக்கல்வித் துறை, E-Box நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
கடந்த கல்வியாண்டில் தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் ஆயிரத்து 633 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்ததாலும், அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் சேர இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
https://neet.e-box.co.in/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள், இன்று பதிவு செய்து, வகுப்பில் பங்கேற்கலாம்.