பள்ளிகளை திறப்பதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரில் வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தங்கள் கருத்துக்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.
அவை, வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. பள்ளிகளுக்கு நேரில் வர இயலாத பெற்றோர்கள் கடிதம், மின்னஞ்சல், செல்போன் வாயிலாக கருத்து தெரிவிக்கலாம்.