டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் சிலையை காணொலி மூலம் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி
டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் முழு அளவிலான சிலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜகதீஷ் குமார் விடுத்த அறிக்கையில், இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவரான விவேகானந்தரால் இந்தியா பெருமை அடைந்துள்ளதாகவும், கல்வி வளர்ச்சி குறித்து விவேகானந்தர் பல சிறந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.